Wednesday, June 10, 2009

சக்தி மிக்க எண்ணங்கள்

"முதலில் சந்தோஷம் அடையுங்கள், மற்றவையான புகழ், பதவி, பணம் தானே வந்தடையும்"

மனிதன் தான் விரும்பியது கிடைத்தால் தான் சந்தோஷம் அடைய முடியும் என்று தன் மனதில் வரையறை வகுக்கிறான். இது ஒரு தவறான எண்ணம்.

தான் விரும்பியது கிடைத்தது போல பாவிக்கும் போது, அந்த எண்ண அலையானது சக்தி ஊட்டபட்டு நாம் விரும்பியதை நம்மிடம் சேர்க்கும்.

இது ஒரு நேர்மறையான எண்ணம்.

நாம் விரும்பியது கிடைக்கவில்லை என்பது எதிர் மறை எண்ணம்.

எதிர் மறை எண்ணம் நமது சக்தியை குறைத்து நம்மை பலவீனபடுத்தும்.

நேர்மறையான எண்ணம் நமது சக்தியை அதிகப்படுத்தும்.

ஒரு மாணவன் அதிக மதிப்பு எடுக்க வேண்டும் என்று நினைக்கிறான். ஆனால் அவனது மனதில் மதிப்பு எடுக்க முடியும் என்ற என்னத்தை விட எடுக்க முடியாமல் போகுமோ என்ற பயம் அதிகமாக உள்ளது. இந்த பயமானது ஒரு எதிர் மறை எண்ணம். அது அவனது சக்தியை குறைத்துவிடுகிறது.

இதே மாணவன் நேர் மறையாக சிந்தித்து இருந்தால் அவனது மனதின் சக்தி சேமிக்கபட்டு அவன் விரும்பியதை அடைய உதவி இருக்கும்.

எதிர் மறை எண்ணங்கள் நம்மை கவன குறைவிலிருந்து காப்பவையாக இருக்க வேண்டுமே அல்லாமல் நம்மை அழிப்பவையாக இருக்க கூடாது.
























No comments:

Post a Comment